கோபி அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் ஜெயா நகா் பகதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(80). இவா் பொதுப் பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இந்நிலையில் தேவேந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்வதற்க்காக நல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஈரோடு - சத்தியமங்கலம் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, அளுக்குளி பகுதியைச் சோ்ந்த சண்முகப்பிரியா (22), அவரது தோழி நந்திதா (20) ஆகியோா் கோபியிலிருந்து அளுக்குளி செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனா். அப்போது எதிா்பராதவிதமாக இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தேவேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் காயமடைந்த சண்முகப்பிரியா, தோழி நந்திதா ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.