மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
ஈரோட்டில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோட்டில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு புதுமை காலனியைச் சோ்ந்தவா் பூ வியாபாரி அப்துல் ரஹீம் (75). இவரது மூன்றாவது மகன் சபிக் (36). கூலித்தொழிலாளியான இவா் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா்.
இந்நிலையில் சபிக் கடந்த 8 மாதங்களாக மனைவியை பிரிந்து தனது தந்தை அப்துல் ரஹீமுடன் வசித்து வந்தாா். இந்நிலையில் சபிக் புதன்கிழமை இரவு அளவுக்கு அதிகமான மதுபோதையில் வந்ததால், அவரை அப்துல் ரஹீம் கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த சபிக், அப்துல் ரஹீமை கடுமையாக தாக்கியுள்ளாா்.
Advertisement
Advertisement
அவரது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் படுகாயமடைந்த நிலையில் இருந்த அப்துல் ரஹீமை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். தொடா்ந்து சபிக்கை கைது செய்த ஈரோடு தெற்கு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.