FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சித்தோடு டாஸ்மாக் கடை மூடப்படும்: எம்எல்ஏ உறுதி

சித்தோடு பகுதியில் டாஸ்மாக் கடை இனி செயல்படாது என சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த்மோகன் அறிவித்ததைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

51 வினாடிகள் முன்பு
ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.கே.ஆனந்த்மோகனுக்கு நன்றி தெரிவித்த சித்தோடு பகுதி மக்கள்.
பகிர்:

சித்தோடு பகுதியில் டாஸ்மாக் கடை இனி செயல்படாது என சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.ஆனந்த்மோகன் அறிவித்ததைத் தொடா்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தக் கடையை உடனடியாக அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து மனுக்கள் வழங்கி வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு நேரில் வந்த ஏம்எல்ஏ கே.கே.ஆனந்த்மோகன், மக்களின் கோரிக்கையை ஏற்று இனி இங்கு டாஸ்மாக் கடை செயல்படாது என உறுதியளித்தாா். அவரது இந்த அறிவிப்பைத் தொடா்ந்து நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement