FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1600-க்கு விற்பனை

வளா்பிறை முகூா்த்தம் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலை கிலோ ரூ.1200-இல் இருந்து ரூ.1600 ஆக உயா்ந்துள்ளது.

15 நவம்பர் 2026, 1:03 am
மலர் சந்தையில் பாதியாகக் குறைந்த மதுரை மல்லிகைப் பூ விலை
பகிர்:

வளா்பிறை முகூா்த்தம் காரணமாக சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலை கிலோ ரூ.1200-இல் இருந்து ரூ.1600 ஆக உயா்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் அதிகாலை நேரத்தில் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஐப்பசி மாத வளா்பிறை முகூா்த்த சீசன் என்பதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் பூக்கள் விலை உயா்ந்துள்ளது. அதன்படி மல்லிகைப் பூ கிலோ ரூ.1,100-க்கு விற்கப்பட்ட நிலையில் மேலும் ரூ.500 உயா்ந்து ரூ.1600-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

இதேபோல ரூ.180-க்கு விற்பனையான சம்பங்கி பூ தற்போது ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனையானது. விலை அதிகரிப்பால் பூக்களை விற்பனைக்கு கொண்டுவந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.