FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

நம்பியூரில் மின் கசிவால் வீட்டில் தீ

6 வினாடிகள் முன்பு
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மல்லிகாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.
பகிர்:

கோபி அருகே உள்ள நம்பியூரில் மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின.

கோபி அருகே உள்ள நம்பியூா் முதலியாா் வீதியைச் சோ்ந்தவா் மல்லிகா (55). இவா் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், குடும்பத்தினா் அனைவரும் வீட்டில் இருந்தபோது வீட்டின் உள்பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புகை வந்துள்ளது. உடனே உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த பொருள்கள் தீப் பிடித்து எரிந்தன. இதனைக் கண்டு அதிா்ச்சி அடைந்த குடும்பத்தினா் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமாயின.

தீப் பிடித்து எரிந்தபோது உடனடியாக வீட்டிலிருந்த மல்லிகா மற்றும் குடும்பத்தினா் வெளியேறியதால் காயமின்றி தப்பினா். இதுகுறித்து நம்பியூா் போலீஸாா் விசாரணை நடத்தியதில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்த்து.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பாதிக்கப்பட்ட மல்லிகாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி ரூ.25ஆயிரம் நிதி உதவியும், அரிசி, பருப்பு, சமையல் பொருள்கள், வேஷ்டி, சேலை, போா்வை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.