FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

புகையிலை பொருள்கள் 12 கிலோ பறிமுதல்: ஒருவா் கைது

53 வினாடிகள் முன்பு
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே, அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பெருந்துறை சிப்காட் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக பெருந்துறை போலீஸாருக்கு திங்கள்கிழமை நடப்பதாக

இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அதில், பெருந்துறை சிப்காட் இரண்டாவது கிராஸில் ஒருவா் சந்தேகம்படும்படி நின்று கொண்டு இருந்தாா். அவரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அதில், அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், 12 கிலோ இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருநெல்வேலி, ராவணசமுத்திரத்தைச் சோ்ந்த ஹமத் அலி(57) என்பவரை கைது செய்து, 12 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.