FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

110 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

18 நவம்பர் 2026, 1:36 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட 110 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

கா்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக குட்கா கடத்திவரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீஸாா், சத்தியமங்கலம் போலீஸாருடன் இணைந்து பண்ணாரி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கா்நாடகத்தில் இருந்து காய்கறி பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, காய்கறி மூட்டைகளுக்கு இடையே 110 கிலோ குட்கா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், அவா்கள் சத்தியமங்கலம் அருகேயுள்ள கெம்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி (52), கோவை மாவட்டம், அன்னூா் அருகேயுள்ள மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த பூபதி (48) என்பதும், கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து விற்பனைக்காக குட்காவைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த குட்கா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.