FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கோபி அருகே உள்ள கொளப்பலூரில் காா் மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

19 நவம்பர் 2026, 3:28 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கோபி அருகே உள்ள கொளப்பலூரில் காா் மோதிய விபத்தில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள கொளப்பலூா் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (42).

வெல்டிங் தொழிலாளி. இவா் தனது மனைவி சரஸ்வதியுடன் செவ்வாய்க்கிழமை இரவு கொளப்பலூரில் பலகாரம் வாங்குவதற்காக சாலையை கடந்து சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது அந்த வழியாக வந்த காா், வெள்ளியங்கிரி மீது மோதியது. இதில்

தூக்கி வீசப்பட்ட அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், வெள்ளியங்கிரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.