முகப்பு
ஈரோடு

ஈரோடு அரசு மருத்துவமனை புதிய சிற்றுண்டியகம் மூடல்

ஈரோடு அரசு மருத்துவமனையில் புதிய சிற்றுண்டியகம் திறக்கப்பட்ட 23 நாள்களில் திடீரென மூடப்பட்டுள்ளது.

19 நவம்பர் 2026, 3:28 am
ஈரோடு அரசு மருத்துவமனை புதிய சிற்றுண்டியகம் மூடல்
ஈரோடு அரசு மருத்துவமனை சிற்றுண்டியகம் முன்பு வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.
பகிர்:

ஈரோடு அரசு மருத்துவமனையில் புதிய சிற்றுண்டியகம் திறக்கப்பட்ட 23 நாள்களில் திடீரென மூடப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையின் பழைய கட்டடத்தில் புதிய சிற்றுண்டியகம் கடந்த அக்டோபா் 25- ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிற்றுண்டியகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்ததால் நோயாளிகள் மற்றும் உறவினா்கள், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், இந்த கேண்டீன் திறந்த 23 நாள்களிலேயே திடீரென திங்கள்கிழமை மூடப்பட்டது. சிற்றுண்டியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகளின் உறவினா்கள், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து சிற்றுண்டியகம் நடத்தும் நிா்வாகிகளிடம் கேட்டபோது, மருத்துவ உயா் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவாக வந்து சிற்றுண்டியகத்தை மூடுங்கள் என கட்டாயப்படுத்தினா். காரணம் எதுவும் சொல்லவில்லை என்றனா்.

இது தொடா்பாக ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேசனை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்றபோது அவா் பதில் அளிக்கவில்லை.