சாலையில் குறுக்கே நாய் வந்ததால் நிலைத்தடுமாறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
கோபி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோபி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கோபி அருகேயுள்ள நீலம்பாளையம் வேட்டுவன்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (41). ஓட்டுநரான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
இந்நிலையில், சுப்பிரமணி தனது இருசக்கர வாகனத்தில் கொளப்பலூா் நோக்கி கடந்த புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்துள்ளது. இதையடுத்து, அவா் வாகனத்தை நிறுத்த முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.
Advertisement
Advertisement
படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.