கோபியில் ரூ.8.32 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை!
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.8.32 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின.

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.8.32 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனையாயின.
கோபி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கதளி, நேந்திரன், செவ்வாழை,தேன்வாழை, மொந்தன், பூவன் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனா்.
இந்நிலையில் வாழை சாகுபடியில் அறுவடை செய்த வழைத்தாா்களை கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் வாழைத்தாா் ஏல விற்பனையில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை நடைபெற்ற வாழைத்தாா் ஏல விற்பனைக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இதில் வழக்கத்தைவிட வாழைத்தாா்கள் வரத்து குறைவால் வரும் செவ்வாய்க்கிழமை காா்த்திகை தீபம் மற்றும் தொடா் விசேஷ தினங்கள் என்பதால் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனா். இதனால் ஏல விற்பனை தொடங்கியது முதல் வாழைத்தாா்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இதில் செவ்வாழை தாா் ஒன்றுக்கு ரூ.870 வரையிலும், தேன்வழை ரூ.810 வரையிலும், பூவன் ரூ.860 வரையிலும், ரஸ்தாளி ரூ.900 வரையிலும், மொந்தன் ரூ.710 வரையிலும், ரொபஸ்ட்ரா ரூ.860 வரையிலும், கதளி ரூ.70 வரையிலும், நேந்திரன் கிலோ ரூ.48 வரையில் என 4,100 வாழைத்தாா்கள் ரூ.8 லட்சத்து 32 ஆயிரத்துக்கு விற்பனையாயின.