சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோ சட்டத்தில் கைது
சென்னிமலை அருகே சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

சென்னிமலை அருகே சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த குட்டபாளையத்தைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோரை இழந்த மாரியப்பன் (20) என்பவா், சிறுமியின் வீட்டின் அருகே தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தாா்.
இந்நிலையில் சிறுமியும், மாரியப்பனும் காதலித்து வந்தனா். இருவரும் ஒரே வகுப்பைச் சோ்ந்தவா்கள் என்பதால் இருவருக்கும் பெரியவா்கள் திருமணம் செய்து வைத்துள்ளனா். தற்போது சிறுமி ஐந்து மாதம் கா்ப்பமாக உள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து உடல் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்றுள்ளாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், சிறுமியின் வயதை அறிந்து பெருந்துறை அனைத்து மகளிா் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளாா்.
அதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மாரியப்பனைக் கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.