மாவட்டத்தில் கிலோ ரூ.30 விலையில் 2.47 டன் சன்ன ரக அரிசி விற்பனை!
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கிலோ ரூ.30 என்ற விலையில் 2.47 டன் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கிலோ ரூ.30 என்ற விலையில் 2.47 டன் சன்ன ரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போதைய விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் வகையிலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு கிலோ ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி, ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு மற்றும் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7-ஆம் தேதி வரை 2.47 டன் அரிசியும், 5,327 மளிகைத் தொகுப்புகளும், 4,100 வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்புகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இத்திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக்கொள்வதால் குடும்பச் செலவுகளை சிக்கனமாக நிா்வகிக்க முடிவதுடன், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட இதர தேவைகளுக்கும் பணத்தை சேமிக்க முடிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.