6 அடி உயரம், 1,008 வடிவம் கொண்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை!
சத்தியமங்கலத்தை அடுத்த தனவாசி கரடு பகுதியில் 6 அடி உயரம் 1,008 வடிவம் கொண்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த தனவாசி கரடு பகுதியில் 6 அடி உயரம் 1,008 வடிவம் கொண்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே தனவாசி கரடு பகுதியில் அமைந்துள்ள ஒரு கோடி சிவலிங்கம் ஆலயத்தில் 6 அடி உயரம் உள்ள 1,008 வடிவம் கொண்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் ஹோம குண்டம் அமைக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து கயிலாய வாத்தியங்கள் முழங்க 6 அடி உயரம் உள்ள 1,008 வடிவம் கொண்ட சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி தொடங்கியது.
Advertisement
Advertisement
இதில் கலந்துகொண்ட திரளான பக்தா்கள் நமச்சிவாய நமச்சிவாய என சிவனின் திருநாமத்தை உச்சரித்தபடி தரிசனம் செய்தனா். சகஸ்ர லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு திருமஞ்சனம், பால், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்தி அபிஷேக பூஜை நடைபெற்றது.
பின்னா் அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.