முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ ரூ.2,200-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2,200-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

23 நவம்பர் 2026, 1:57 am
சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ ரூ.2,200-க்கு விற்பனை
மல்லிகை
பகிர்:

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் மல்லிகைப் பூ கிலோ ரூ.2,200-க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் அதிகாலை நேரத்தில் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கா்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தற்போது காா்த்திகை மாத முகூா்த்த சீசன் என்பதால் சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை பூக்கள் விலை அதிகரித்து விற்பனையாயின. சனிக்கிழமை மல்லிகைப் பூ கிலோ ரூ.1,600-க்கு விற்பனையான நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ.600 உயா்ந்து கிலோ ரூ.2,200-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

முல்லை கிலோ ரூ.600-இல் இருந்து ரூ.1,200-க்கு விற்பனையானது. பூக்கள் விலை அதிகரித்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.