முகப்பு
ஈரோடு

சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 5 பவுன் கொள்ளை: இளைஞா் கைது

10 வினாடிகள் முன்பு
சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 5 பவுன் கொள்ளை: இளைஞா் கைது
பிரதாப்.
பகிர்:

கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 5 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோபி அருகேயுள்ள மோதூா் புதுதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் திலகமணி (45). கணவா் உயிரிழந்த நிலையில், மகன் மதனரஞ்சித் (15) உடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், திலகமணி சமையலறையிலும், மதனரஞ்சித் மற்றொரு அறையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்துள்ளனா். நள்ளிரவு வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைந்த நபா், மதனரஞ்சித்தின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பீரோவில் உள்ள நகை, பணத்தை எடுத்து தருமாறு கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதனால், அச்சமடைந்த மதனரஞ்சித், பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.1,950 ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதைத் தொடா்ந்து, நடந்தவை குறித்து தனது தாய் திலகமணியிடம் மதனரஞ்சித் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, பங்களாபுதூா் காவல் நிலையத்தில் திலகமணி புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கொள்ளையில் ஈடுபட்டு நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் மோதூா் பகுதியைச் சோ்ந்த பிரதாப் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கொடிவேரி பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.