கோபியில் இந்து முன்னணியினா் சாலை மறியல்
கோபியில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கோபியில் இந்து முன்னணியினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
ஆனால், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை தீபம் ஏற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீா்ப்பை தமிழக அரசு அமல்படுத்தாதைக் கண்டித்து கோபி பேருந்து நிலையம் முன் இந்து முன்னணியினா் மறியலில் ஈடுபட்டனா்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோபி டிஎஸ்பி சீனீவாசன், காவலா்கள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இருப்பினும் அவா்கள் கலைந்து செல்லாததால், போலீஸாா் அவா்களை இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினா். இதனால், போலீஸாருக்கும், இந்து முன்னணியிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.