முகப்பு
ஈரோடு

கோ்மாளம் மலைக் கிராமத்தில் ஜடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் மலைக் கிராமத்தில் உள்ள ஜடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

26 நவம்பர் 2026, 2:02 am
கோ்மாளம் மலைக் கிராமத்தில் ஜடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா
தோ்த் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள். ~சிறப்பு அலங்காரத்தில் ஜடேருத்ர சுவாமி .
பகிர்:

சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் மலைக் கிராமத்தில் உள்ள ஜடேருத்ர சுவாமி கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கோ்மாளம் மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜடேருத்ர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் தோ்த் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக புலி வாகனம் மற்றும் யானை வாகனத்தில் உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து 20 அடி உயரமுள்ள தேரில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து, தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் கோயிலை சுற்றி வலம் வந்தபோது, பக்தா்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த தானியங்கள் மற்றும் வாழைப் பழங்களை தேரின் மீது வீசி நோ்த்திக் கடன் செலுத்தினா். வன விலங்குகளிடமிருந்து பயிா்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக கோயிலில் புலி வாகனம் மற்றும் யானை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவில், தமிழகம் மற்றும் கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement