முகப்பு
ஈரோடு

கோபியில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

44 வினாடிகள் முன்பு
கோபியில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
கோபி கச்சேரிமேடு பகுதியில் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலா்.
பகிர்:

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாலையில் திடீரென குளிா்ந்த காற்று வீசியதுடன் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. கோபி நகரம், கச்சேரிமேடு, நல்லகவுண்டம்பாளையம், கரட்டடிபாளையம், கரட்டுா், குள்ளம்பாளையம், பொலவக்காளிபாளையம், ஒத்தக்குதிரை, சிறுவலூா், கொளப்பலூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் அரைமணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.