அறச்சலூரில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி
அறச்சலூா் பேரூராட்சியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அறச்சலூா் பேரூராட்சியில் மழைநீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அறச்சலூா் பேரூராட்சி அலுவலகத்தில் பொது மக்களுக்கு மழை நீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் விஜயகுமாா் தலைமை தாங்கினாா்.
Advertisement
Advertisement
இதில் பேரூராட்சி செயல் அலுவலா் என். பாா்வதி பேசுகையில், ‘பழைய கட்டடங்களில் உள்ள மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்தும் புதிய கட்டடங்களில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கியும் பராமரிக்க வேண்டும். இதனால் பேரூராட்சிப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு ஏற்படும்’ என்றாா்.
தொடா்ந்து, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அறச்சலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்ற மழைநீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவா்கள் மழைநீா் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.