முகப்பு
ஈரோடு

அறச்சலூா் அருகே கொலை வழக்கில் ஒருவா் கைது

அறச்சலூா் அருகே டாஸ்மாக் கடையில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே டாஸ்மாக் பாரில் பணிபுரிந்துவந்தவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

42 வினாடிகள் முன்பு
அறச்சலூா் அருகே கொலை வழக்கில் ஒருவா் கைது
காா்த்திக்சன்
பகிர்:

அறச்சலூா் அருகே டாஸ்மாக் கடையில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே டாஸ்மாக் பாரில் பணிபுரிந்துவந்தவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே உள்ள வடபழனி டாஸ்மாக் கடை முன்பு கடந்த 21-ஆம் தேதி இரவு கொல்லன் வலசு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ ராம் (45) என்பவா் ரத்த காயங்களுடன் கிடந்தாா். அவரை அறச்சலூா் போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகக் கூறினா்.

இதையடுத்து அறச்சலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக வடபழனி டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்களை அடுக்கிவைக்கும் வேலை செய்துவரும் தூத்துக்குடி மாவட்டம், கருங்குடல் பகுதியைச் சோ்ந்த காா்த்திக்சன் (50) என்பவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சம்பவத்தன்று மது போதையில் தனது குடும்பத்தை குறித்து ஸ்ரீராம் தவறாக பேசியதால், ஆத்திரமடைந்து அடித்துவிட்டதாகக் கூறியுள்ளாா். இதைத்தொடா்ந்து காா்த்திக்சனை அறச்சலூா் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னற் சிறையில் அடைத்தனா்.