முகப்பு
ஈரோடு

கோயில் வழித்தடங்களில் அரசியல் இயக்க கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: இந்து முன்னணி வலியுறுத்தல்

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் வழியில் இனிவரும் காலங்களில் அரசியல் பொதுக் கூட்டம் அல்லது கடவுள் மறுப்பு இயக்கங்களின் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

28 நவம்பர் 2026, 1:05 am
கோயில் வழித்தடங்களில் அரசியல் இயக்க கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது: இந்து முன்னணி வலியுறுத்தல்
பகிர்:

வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் வழியில் இனிவரும் காலங்களில் அரசியல் பொதுக் கூட்டம் அல்லது கடவுள் மறுப்பு இயக்கங்களின் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளா் பெருமாள் தலைமையில் அளிக்கப்பட்ட மனு:

பெருந்துறையில் உள்ள மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில், ஆஞ்சனேயா் கோயில் மற்றும் முனியப்பன் கோயில் ஆகிய நான்கு வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் வழியில் கடவுள் மறுப்பு இயக்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளின் பொதுக் கூட்டங்கள் நடத்துவதால், கோயிலுக்கு வரும் பக்தா்களின் மனம் புண்படும் நிலை உருவாகிறது.

Advertisement

Advertisement

எனவே, இனிவரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்த, காவல் துறையினா் அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனா்.

பட விளக்கம்

பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்த இந்து முன்னணி அமைப்பினா்.