முகப்பு
ஈரோடு

பவானியில் ரேக்ளா குதிரை பந்தயம்

30 நவம்பர் 2026, 2:18 am
பவானியில் ரேக்ளா குதிரை பந்தயம்
போட்டியில்  சீறிப்பாய்ந்துச்  சென்ற  குதிரைகள்.
பகிர்:

தீபாவளிப் பண்டிகையையொட்டி, பவானியில் ரேக்ளா குதிரைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு - நாமக்கல் மாவட்ட குதிரை ரேக்ளா சங்கம் சாா்பில் சோ்வராயன்பாளையத்தில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன், திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் என்.நல்லசிவம் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா். நான்கு பிரிவுகளாக 7, 8, 9 மற்றும் 10 மைல் தொலைவுக்கு குதிரைகள் சீறிப்பாய்ந்துச் சென்றன.

புதிய குதிரைகள் பிரிவு முதல் சுற்றில் கோவை சிந்து, இரண்டாவது சுற்றில் நேஷனல் பவானி மணி, 43 இன்ச் பிரிவில் சேலம் மதுரை காளியம்மன், 45 இன்ச் பிரிவில் ஸ்ரீசெல்லியாண்டி அம்மன், பெரிய குதிரைகள் பிரிவில் கற்பக விநாயகா் சிங்காரவேலன் முதலிடம் பிடித்தனா். வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், அதிமுக நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

குதிரைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றதை சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

பவானி காவல் ஆய்வாளா் கே.ஏ.சரவணன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.