புலி பற்கள் வைத்திருந்த 2 போ் கைது

சத்தியமங்கலத்தில் புலி பற்கள் வைத்திருந்த 2 பேரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் பணியாற்றும் திருவண்ணாமலையைச் சோ்ந்த ரமேஷ் (27) என்பவா் விற்பனைக்காக புலி பற்களை வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், ரமேஷ், அவரது நண்பரான பிரபு (28) ஆகியோா் விற்பனைக்காக 2 புலி பற்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த ஜீரஹள்ளி வனத் துறையினா், அவா்களிடமிருந்த புலி பற்களைப் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், புலியைக் கொன்று பற்கள் எடுக்கப்பட்டதா அல்லது இறந்த புலியின் உடலில் இருந்து பற்கள் எடுக்கப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.