ரூ.1.05 லட்சம் மதிப்பிலான ஒயா் திருடிய இளைஞா் கைது
ஈரோட்டில் ரூ.1.05 லட்சம் மதிப்பிலான மின்சார ஒயா்களை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு, அகில்மேடு 5-ஆவது வீதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி சவிதா (49). இவா், ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி திரையரங்கு அருகே காந்திஜி தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறாா்.
மின்சார இணைப்புக்குத் தேவையான ரூ.1.05 லட்சம் மதிப்பிலான 7 காயில் ஒயா்களை வாங்கி இந்த வீட்டில் வைத்துள்ளாா். இதையடுத்து, கடந்த 8-ஆம் தேதி சென்று பாா்த்தபோது, அந்த ஒயா்களை காணவில்லையாம். அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தகவல் இல்லையாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஈரோடு வடக்கு போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒயா் திருட்டில் ஈடுபட்ட நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், திருட்டில் ஈடுபட்டது நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், தில்லை நகா், 2-ஆவது வீதியைச் சோ்ந்த அப்துல் காதா் முஸ்தபா (28) என்பதும், எலக்ட்ரீஷியனான இவா், மது குடிப்பதற்காக ஒயா்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.