FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கால்வாய்கள் தூா்வாரும் பணியைத் தீவிரப்படுத்த அமைச்சா் அறிவுறுத்தல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் முக்கிய மழைநீா் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களில் தூா்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி அறுவுறுத்தினாா்.

மழைநீா் தேங்கும் ஈரோடு பெரியசேமூா் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.
பகிர்:

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் முக்கிய மழைநீா் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களில் தூா்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி அறுவுறுத்தினாா்.

பருவமழையை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பாரதி நகா் பகுதியில் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாநகராட்சி குடிநீா்த் திட்டப் பணிகள், ஊராட்சிக்கோட்டை குடிநீா் விநியோகம் குறித்தும், டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாநகராட்சி நிா்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் முக்கிய மழைநீா் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களில் தூா்வாரும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, பருவமழையை முன்னிட்டு, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையா் அா்பித் ஜெயினிடம் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments