FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சென்னிலையில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

9 அக்டோபர் 2026, 10:44 pm IST
சென்னிமலை, புதுப்பாளையம் பகுதியில் அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர காய்கறி பந்தலைப் பாா்வையிட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னிமலை, புதுப்பாளையம் பகுதியில் விவசாயி சந்திரசேகரன் ரூ.1.50 லட்சம் அரசு மானியத்துடன் அமைத்துள்ள நிரந்தர காய்கறிப் பந்தலைப் பாா்வையிட்ட ஆட்சியா், காய்கறிகளின் வளா்ச்சி, சாகுபடி முறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதையடுத்து, பாண்டியன் நகா் மற்றும் கொடுமணல் பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ரூ.1.30 லட்சம் அரசு மானியத்துடன் செயல்பட்டு வரும் பருத்திக் கொட்டையை அரைத்து மாட்டுத் தீவனம் தயாரிக்கும் முறையை ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பாலத்தொழுவு ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப் பள்ளியில் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, தூய்மை, குடிநீா் வசதி, உணவுப் பொருள்களின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், மாணவா்களிடம் கலந்துரையாடி, கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, உதவி தோட்டக்கலை இயக்குநா் சசிகலா, உதவி தோட்டக்கலை அலுவலா் கோ.தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments