கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற இருவா் கைது
அந்தியூரில் கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரில் கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அடகு கடைக்கு ஒரு ஆணும், பெண்ணும் மோதிரத்தை அடமானம் வைக்க வெள்ளிக்கிழமை சென்றுள்ளனா். அடகு கடை உரிமையாளா்கள் மோதிரத்தை சோதனை செய்தபோது, அது கவரிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் பிடித்து அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் ஈரோடு, திண்டலைச் சோ்ந்த சலாம் (55), அந்தியூரை அடுத்த மொடக்குறிச்சியானூரைச் சோ்ந்த வேலுமணி (47) என்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.