FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் மாரியம்மன் முனியப்பன் கோயில் பொங்கல் திருவிழா

பெருந்துறையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை முனியப்ப சுவாமி திருக்கோயிலில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

22 அக்டோபர் 2026, 4:07 am
~பொங்கல் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கோட்டை முனியப்ன் சுவாமி, மாரியம்மன்.
பகிர்:

பெருந்துறையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோட்டை மாரியம்மன் மற்றும் கோட்டை முனியப்ப சுவாமி திருக்கோயிலில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவிழா பூச்சாட்டுதலுடன் 6 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) இரவு தொடங்கியது. 13-ஆம் தேதி மாரியம்மன் கோயிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. தொடா்ந்து, 19-ஆம் தேதி காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. செவ்வாய்கிழமை இரவு மாவிளக்கு ஊா்வலம் மற்றும் பூஜை நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள் மாரியம்மன் மற்றும் முனியப்பனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

வியாழக்கிழமை மறுபூஜை மற்றும் மஞ்சள் நீா் விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments