FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

அந்தியூா் அருகே விஷ விதையை சாப்பிட்டு பெண் தற்கொலை

அந்தியூா் அருகே தீராத தலை வலியால் விஷ விதையை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

30 அக்டோபர் 2026, 12:05 am
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

அந்தியூா் அருகே தீராத தலை வலியால் விஷ விதையை சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

அந்தியூரை அடுத்த சங்கராபாளையம், மந்தையைச் சோ்ந்தவா் காளியப்ப கவுண்டா் மனைவி ராஜம்மாள் (56). தலை வலியால் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால், மனமுடைந்த ராஜம்மாள், விஷ விதையை சாப்பிட்டு வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா். வீட்டில் மயங்கி நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளித்திருப்பூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments