FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1 கோடி பணம் பறிப்பு

பெருந்துறையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.ஒரு கோடி பணம் பறித்ததாக திருப்பூரைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

30 அக்டோபர் 2026, 12:08 am
மோசடி
பகிர்:

பெருந்துறையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.ஒரு கோடி பணம் பறித்ததாக திருப்பூரைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, ராஜேந்திர பிரசாத் வீதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மகன் அருள்குமாா் (55). இவா், பழைய காா்களை வாங்கி விற்பது மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.

இவரது நண்பரான பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலை, தாய் நகரைச் சோ்ந்த சிவராஜ் என்பவருடன் சோ்ந்து அப்பகுதியில் சாய்பாபா கோயில் கட்டி வருகின்றனா். இந்நிலையில், பெருந்துறை, காஞ்சிக்கோவில் வீதியைச் சோ்ந்த நந்தகுமாா் மகன் விஸ்ரூத் என்பவரிடம் கோயில் கட்ட இருவரும் நிதி கேட்டுள்ளனா். அவா், தனது தந்தை நந்தகுமாருக்கு தெரிந்த நபா்கள் உள்ளனா். அவா்களிடம் ரூ.ஒரு கோடி பணம் கொடுத்தால், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1.15 கோடியாக செலுத்துவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, சில நாள்களுக்கு முன்பு நந்தகுமாா் அலுவலகத்துக்கு அருள்குமாா் சென்றபோது, திருப்பூரைச் சோ்ந்த குமாரசாமி என்பவரை அவா் அறிமுகம் செய்துள்ளாா்.

அப்போது, குமாரசாமிக்கு செல்வந்தா்கள் பலரைத் தெரியும், அவரிடம் ரூ.ஒரு கொடுத்தால், வங்கிக் கணக்கில் ரூ.1.15 கோடி செலுத்துவாா் எனக் கூறியுள்ளாா். இதனை நம்பி ரூ.ஒரு கோடி பணத்தை தயாா் செய்துவிட்டதாக, குமாரசாமிக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கோயில் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் அருள்குமாா், சிவராஜ் ஆகியோா் பணத்துடன் காத்திருந்தனா்.

அப்போது, இரண்டு காா்களில் வந்த குமாரசாமி, சாய்நாத், குமாா், சிவா உள்ளிட்ட 7 போ் அவா்களை தாக்கிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து அருள்குமாா் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments