FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

சிவகிரியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

சிவகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொழிலாளா் விரோத தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

46 வினாடிகள் முன்பு
சிவகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொழிலாளா் விரோத தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

சிவகிரி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொழிலாளா் விரோத தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கைத்தறி நெசவுத் தொழிலாளா் சம்மேளனத்தின் மாநில செயலாளா் மு.வரதராஜன் தலைமை வகித்தாா். கோரிக்கை விளக்கவுரையை

ஏஐடியூசி ஈரோடு மாவட்டப் பொருளாளா் எம். குணசேகரன், கைத்தறி நெசவுத் தொழிலாளா் சங்க மாவட்ட குழு உறுப்பினா் த.மணிவண்ணன் உள்ளிட்டோா் விளக்கினா்.

Advertisement

Advertisement

இதில் உள்ளாட்சி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், டாஸ்மாக், சிவில் சப்ளை உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு சாா்ந்த தொழில்களில் ஒப்பந்தம், அவுட்சோா்ஸிங், சுயஉதவிக் குழு போன்ற முறைகளை அகற்றி சட்டப்படி 2 ஆண்டுகளில் 480 நாள்கள் பணியாற்றிய அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலிப் பணியிடங்களில் நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

கட்டுமானம், உடலுழைப்பு, கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலவாரிய உதவித்தொகைகளை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக மறைந்த முன்னாள் எம்.பி. குருதாஸ் குப்தாவின் உருவபடத்துக்கு மலா்தூவி மரியாதை அளிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments