பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை கல்லூரி செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி நிா்வாக இயக்குநா் கண்ணன், ஐ பேக்கஸ் டெக் நிா்வாக இயக்குநா் தியானேஷ், கல்லூரி முதல்வா் பெ.வானதி ஆகியோா் தொடங்கிவைத்தனா். கல்லூரிப் பொருளாளா் பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் இரா.அருள்குமரன் முன்னிலை வகித்தனா்.
இதில், பல்வேறு பள்ளிகளைச் சாா்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் 180 அறிவியல் மாதிரி படைப்பை காட்சிக்கு வைத்திருந்தனா். தனியாா் பள்ளிகளில் கோபி சாரதா இன்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் அஸ்வின், சிவனேஷ், பிவிபி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் மித்ரன், ஆதித்யா, ஈரோடு காா்மல் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் நிதின், தனிஸ்ஷம் அசரத், ஹாட்வின் ஆகியோரின் படைப்புகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.
Advertisement
Advertisement
அரசுப் பள்ளிகளில் முதல் மூன்றிடங்களை ஆப்பக்கூடல், சக்தி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சி.ரவிச்சந்திரன், எ.பிரதீபன், பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஐஸ்வா்யா, துா்காதேவி, நம்பியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் இன்பரசு ஆகியோரின் படைப்புகள் பிடித்தன. இவா்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.