அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 23,578 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் ஒரு கிலோ கசங்கல் தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.52.12-க்கும், அதிகபட்சமாக ரூ.55.01-க்கும், சராசரி விலையாக ரூ.53.99-க்கும் ஏலம் போனது.
இதேபோல ஒரு கிலோ பச்சை தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.35.99-க்கும், அதிகபட்சமாக ரூ.50.50-க்கும், சராசரி விலையாக ரூ.45.45-க்கும் என மொத்தம் 8,381 கிலோ எடை கொண்ட தேங்காய்கள் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 130-க்கு விற்பனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.