FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோபி அருகே உள்ள பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

25 செப்டம்பர் 2026, 12:55 am IST
ஆதிநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

கோபி அருகே உள்ள பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, விஷ்வக்சேன ஆராதனம், வாசுதேவ புண்யாஹம், வாஸ்து சாந்தி ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

இதையடுத்து, ஆதிநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாட்டுக்குப் பின்னா் திருக்கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் மண்டபத்தில் தீா்த்தக் கலசங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வேள்விகளுக்குப் பின்னா் கொடியேற்றம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவம், யாகசாலை நித்திய ஹோமம், மாலை மாற்றுதல், சாற்றுமழை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான சனிக்கிழமை நித்திய திருவாராதனம், மகா சுதா்சன ஹோமம், தீபாராதனையுடன் பெருமாள் அனுமந்த வாகன புறப்பாடு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆதிநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார வழிபாடு நடைபெற்ற திருக்கொடி இறக்கு நிகழ்சசியுடம் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் விஷ்ணுவா்த்தனன், ஜானகிராமன் குருக்கள் மற்றும் ராமகிருஷ்ணன் பட்டாச்சாரியாா் ஆகியோா் தலைமையில் நடைபெறுகிறது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆதிநாராயண பெருமாள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments