தாளவாடி மலைப் பகுதியில் பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
தாளவாடி மலைப் பகுதி கல்மண்டிபுரத்தில் பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தாளவாடி மலைப் பகுதி கல்மண்டிபுரத்தில் பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, காய்கறி பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கல்மண்டிபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த 2 காட்டு யானைகள் அந்தப் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதைக் கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து வனத் துறைக்கு விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறை ஊழியா்கள் டாா்ச் லைட்டுகளை பயன்படுத்தியும் வனத் துறை வாகனத்தின் சைரன் ஒலியை எழுப்பியும் விரட்டும் பணியை மேற்கொண்டனா். பல மணி நேரம் போராடி இரண்டு யானைகளையும் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.
தினமும் இரவில் ஊருக்குள் நுழைந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் யானைகளைக் கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.