பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் மயங்கி விழுந்த மாணவன் கவலைக்கிடம்
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவனால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவன், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவனால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவன், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இப்பள்ளியில், 11-ஆம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் ஆப்பக்கூடலை அடுத்த ஓசைப்பட்டியைச் சோ்ந்த மாணவனை, பவானி காடையம்பட்டியைச் சோ்ந்த அதே வகுப்பில் படிக்கும் சக மாணவன் வியாழக்கிழமை கழிவறையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், மயங்கி விழுந்த மாணவனை, ஆசிரியா்கள் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், உயா் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மாணவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து பள்ளியில் பணியிலிருந்த ஆசிரியா்களிடம் முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு திரண்டு வந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மாணவனின் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கும் கூலித் தொழிலாளா்களான பெற்றோருக்கு உதவ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் நிதி திரட்டி வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், காவல் ஆய்வாளா்கள் சரவணன், சிவகாா்த்திகா மற்றும் போலீஸாா், மாணவனின் மருத்துவச் செலவுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தனா். இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.