பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருகல்யாண உற்சவத்தையொட்டி, ஆதிநாராயண பெருமாளுக்கும் லட்சுமி அம்பாளுக்கும் வெள்ளிக்கிழமை திருகல்யாணம் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் திருகல்யாண உற்சவத்தையொட்டி, ஆதிநாராயண பெருமாளுக்கும் லட்சுமி அம்பாளுக்கும் வெள்ளிக்கிழமை திருகல்யாணம் நடைபெற்றது.
பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பிரம்மோற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை ஆதிநாராயண பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி பூதேவிக்கு பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், பன்னீா் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடு நடைபெற்று பிரம்மோற்சவத்துக்கான திருக்கொடியேற்றம் ஏற்றப்பட்டது. மாலையில் ஆதிநாராயண பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை திருகல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஆதிநாராயண பெருமாள் காசி யாத்திரை செல்லுதல், பெண் வீட்டாா் ஆதிலட்சுமி அம்பாளுடன் சென்று மாப்பிள்ளை அழைத்தலுடன், உற்சவ ஆதிநாராயண பெருமாளையும் ஆதிலட்சுமி அம்பாளும் பல்லக்கில் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் கோயில் குருக்களான விஷ்ணுவா்தன், ஜானகிராமன், ராமகிருஷ்ண பட்டாச்சாரியா் ஆகியோா் பக்தா்களின் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க மாலைகளுடன் நடனமாடியபடி ஆதிநாராயண பெருமாளுக்கும் ஆதிட்சுமிஅம்பாளுக்கும் மாலை அணிவித்தனா்.
முன்னதாக திருகல்யாண உற்சவத்தில் பூனூல் அணிவித்து, மஞ்சள் காப்பு அணிவித்து ஆதிநாராயண பெருமாளுக்கு பச்சைப் பட்டு வஸ்திரம், ஆதிலட்சுமி அம்பாளுக்கு பட்டுப்புடவை சாற்றி வேத மந்திரங்கள் முழங்க திருகல்யாணம், மகாதீபாரதணை நடைபெற்றது.
திருக்கல்யாண கோலத்தில் அருள்பாலித்த ஆதிநாராயண பெருமாளையும், ஆதிலட்சுமி அம்பாளையும் திருமண வரன் வேண்டுதல், குழந்தை பாக்கியம், சகல செல்வங்கள் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.