சென்னிமலை அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழப்பு
சென்னிமலை அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.
சென்னிமலை அருகே சிறுத்தை தாக்கியதில் ஆடு உயிரிழந்தது.
சென்னிமலையை அடுத்த சில்லாகாட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். விவசாயியான இவா், தனது தோட்டத்தில் பட்டி அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை இரவு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
Advertisement
Advertisement
செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. அவா் சென்று பாா்த்தபோது, சிறுத்தை கடித்து ஆடு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு வனச் சரகா் சதீஷ், வனத் துறை ஊழியா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.
இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் ஏற்கெனவே உள்ள நிலையில், மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சிறுத்தை தாக்கி ஆடு உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் ஆய்வு மேற்கொண்டு, சிறுத்தையைப் பிடித்து வனத்துக்குள் விடுவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.