FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கோபி, நம்பியூரில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பில் கோபி, நம்பியூா் பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். ~
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா் சங்கம் சாா்பில் கோபி, நம்பியூா் பகுதிகளில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்கள் சங்க நிா்வாகி சின்னம்மாள் தலைமை வகித்தாா். கலைவாணி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சிபிஐ ஒன்றியச் செயலாளா் வி.பி.கோபாலன் கலந்துகொண்டு பேசினாா்.

தூய்மைக் காவலா்கள், பணியாளா்கள், தூய்மை பாரத இயக்கத்தில் பணியாற்றும் மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், திட்ட மேலாண்மை அழகு பணியாளா்கள், கிராம வட்டார ஊராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்குபவா்கள் சுகாதார ஊக்குநா்கள், ஊரக வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் என அனைவருக்கும் தொழிலாளா் நலச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

கிராம தூய்மைக் காவலா் சட்டப்படி ரூ.12,593 ஊதியம் வழங்க வேண்டும், வெளி முகமை ஒப்பந்த முறைகளை கைவிட வேண்டும், ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல நம்பியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தூய்மைப் பணியாளா் சங்க நிா்வாகி ரங்கசாமி தலைமை வகித்தாா். ராதா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஏஐடியூசி ஒன்றிய அமைப்பாளா் பரமேஸ்வரன் கலந்துகொண்டு பேசினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments