2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: ஜான் பாண்டியன் பேட்டி
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
உதகையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் தெரிவித்ததாவது:
2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும். மது ஒழிப்பு குறித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இருப்பினும், போராட்டங்களை நடத்துவதால் மதுவை ஒழித்துவிட முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் காரணமாகவே மதுவிலக்கு போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தேவையற்றது. மது அருந்துபவர்கள் திருந்தினால் மட்டுமே மதுவை ஒழிக்க முடியும்.
Advertisement
Advertisement
டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி போலீஸாரே சிறப்பாக விசாரித்து வருவதால், சிபிஐ விசாரணை கோருவது தேவையற்றது. உயர் அதிகாரிகள் அளித்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அதுதொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடகாவில் நடத்தப்படும் பந்த் தேவையற்றது. இதை அவர்கள் தொடர்ந்து அரசியலாக்கி வருகின்றனர். மத்திய அரசு இப்பிரச்னையை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு மௌனம் சாதித்து வருகிறது.
உதகையில் படகு இல்லத்தில் நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக, நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.