திமுக தலைவர் மறைவுக்கு பண்டைய பழங்குடியினர் நலச் சங்கம் இரங்கல்
நீலகிரி மாவட்ட மக்கள் எந்நேரமும் சந்திக்கக் கூடிய ஒரு தலைவரை இழந்து விட்டதாக, பண்டைய பழங்குடியினர் நலச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்ட மக்கள் எந்நேரமும் சந்திக்கக் கூடிய ஒரு தலைவரை இழந்து விட்டதாக, பண்டைய பழங்குடியினர் நலச்சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து இச்சங்கத்தின் தலைவர் எம்.ஆல்வாஸ், செயலர் புஷ்பகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 5 முறை முதல்வராகப் பணியாற்றிய திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். அவர் முதல்வராக இருந்தபோது பழங்குடியினரின் நலன் கருதி 2 வீடுகள் மட்டுமே இருந்த கிராமத்துக்கும் கூட மின் இணைப்பை ஏற்படுத்தித் தந்தது மறக்க முடியாததாகும்.
பழங்குடியினரின் குடிசைகளுக்குப் பதிலாக நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்துத் தந்தது, அனைவருக்கும் விலையில்லா வண்ண தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியது உள்ளிட்டவையும் மறக்க முடியாத திட்டங்களாகும். நீலகிரி மாவட்ட பண்டைய பழங்குடியினர் நலச்சங்கம் சார்பில் அவரை நேரில் சந்தித்தபோது, மிக எளிமையான சந்திப்பாக இருந்தது. நீலகிரி மாவட்ட மக்கள் எந்நேரமும் சந்திக்கக் கூடிய ஒரு தலைவரை இழந்துள்ளது வருத்தத்திற்குரியது என்று தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.