FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோத்தகிரி பேக்கரியில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம்

கோத்தகிரியில் உள்ள தனியார் பேக்கரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த உரிமையாளருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.   

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

கோத்தகிரியில் உள்ள தனியார் பேக்கரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த உரிமையாளருக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.   
நீலகிரி மாவட்டத்தில் 51 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தவும், மெழுகு பூசப்பட்ட பேப்பர் டம்ளர்கள், பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். 
இந்நிலையில், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சுங்கச் சாவடியில் பிளாஸ்டிக் பொருள்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு உணவு பாதுகாப்பு அலுவலர் ஆதி கோபாலகிருஷ்ணன், கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியிலுள்ள பேக்கரிகளில் திடீர்  சோதனை மேற்கொண்டார். சோதனையின் போது ஒரு பேக்கரியில் ரொட்டி பேக்கிங் செய்வதற்காக பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளருக்கு ரூ.17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை உள்ளதால் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வதும், பயன்படுத்தும் குற்றம் என்பதால் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments