தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வுப் பேரணி
குன்னுரில் தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
குன்னுரில் தேசிய விளையாட்டு தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஹாக்கி விளையாட்டின் தந்தை என கருதப்படும் மேஜர் தயான்சந்த் பிறந்த தினமான ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நீலகிரிஸ் ஹாக்கி அமைப்பினர் சார்பில் உபதலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வுப் பேரணி உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி அம்பிகாபுரம் ரோடு வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நீல்கிரிஸ் ஹாக்கி சங்க துணைச் செயலாளர் சுரேஷ்குமார் பேசினார்.
நிகழ்ச்சியில் உபதலைஅரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், அருவங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.