FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின் மக்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பகிர்:

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின் மக்களுக்கான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் காந்தித் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காகவும் ஜாதி, மத வேறுபாடின்றி, மதநல்லிணக்கத்துடனும், தேச ஒருமைப்பாட்டுடனும் இதுவரை செயல்பட்டு வரும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். நாட்டில் அமைதியை நிலைநாட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் பழைய சட்டமே நடைமுறையில் இருப்பதுதான் சிறந்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு சூழ்ச்சி காரணமாக ஜாதியின் பெயராளும், மதத்தின் பெயராளும் பிரிவினையை ஏற்படுத்தி நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து வருகிறது. தமிழகத்தை ஆளும் கட்சி பாஜகவின் ஊழல் பினாமி ஆட்சியாகவே செயல்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க திமுகவும், காங்கிரசும் தொடர்ந்து போராடி வருகின்றன.
பல ஆண்டுகளாக கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வாழ்ந்து விவசாயம் செய்து வரும் மக்களுக்கு நில உரிமை, குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு, நிலப்பட்டா இதுவரை மறுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உண்மை நிலையை தெரிவித்து இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் நிலப்பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியும் மகிழ்ச்சியும் காணமுடிகிறது. எதிர்கால இந்தியா அமைதியாகவும், வலிமையாகவும் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments