கோத்தகிரி அருகே அரசுப் பேருந்து-வேன் மோதல்: 25 பேர் காயம்
கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசுப் பேருந்தின் பின் பகுதியில் தனியார் வேன் வியாழக்கிழமை மோதிய விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் அரசுப் பேருந்தின் பின் பகுதியில் தனியார் வேன் வியாழக்கிழமை மோதிய விபத்தில் 25 பேர் காயமடைந்தனர்.
கோத்தகிரி அருகே வார்விக் பகுதியில் கடசோலையிலிருந்து கோத்தகிரி நோக்கி அரசுப் பேருந்து வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தது. வார்விக் என்னும் இடத்தில் வந்தபோது, கைக்காட்டி பகுதியிலிருந்து கோத்தகிரி நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்தின் பின்னால் மோதியது.
இதில் அரசுப் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. இதில் வேன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக காயமடைந்தவர்கள் அனைவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்தவர்கள் உயர் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.