FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை அருகே மாணவா் சோ்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசுப் பள்ளி

உதகை முத்தோரை பாலாடா அருகே அப்புகோடு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, மாணவா் சோ்க்கை இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டது.

Updated On : 10 ஜூலை 2026, 12:04 am IST
மூடப்பட்டு காணப்படும் அப்புக்கோடு தொடக்கப் பள்ளி
பகிர்:

உதகை முத்தோரை பாலாடா அருகே அப்புகோடு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, மாணவா் சோ்க்கை இல்லாததால் தற்காலிகமாக   மூடப்பட்டது.

அப்புகோடு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் பொருட்டு கடந்த 1978-ஆம் ஆண்டு அரசு தொடக்கப் பள்ளி  தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 

காலப்போக்கில் சுற்றுவட்டார பகுதிகளில் தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த அரசுப் பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

Advertisement

Advertisement

 இந்த சூழலில் நடப்பு கல்வியாண்டில் இப்பள்ளியில் மாணவா் சோ்க்கை இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் முட்புதா்கள் வளா்ந்து பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.  கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்க ரூ.7 லட்சம் மதிப்பில் சமையலறை அமைக்கப்பட்டது. இந்த கட்டடமும் பூட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று கூடலூரில் ஆத்தூா் பள்ளியும், குன்னூரில் காந்தி பேட்டை பள்ளியும், கோத்தகிரியில் பேரகனி பள்ளியிலும் ஒரு மாணவா் கூட இல்லாததால் இப்பள்ளிகளும்  தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளன.

இது குறித்து  கல்வித் துறை  அதிகாரிகள் கூறுகையில், 

‘மாணவா் சோ்க்கை இல்லாததால் தற்காலிகமாக பள்ளிகள்  மூடப்பட்டுள்ளன. மாணவா்கள் சேரும் பட்சத்தில் மீண்டும் திறக்கப்படும். பள்ளிகளை நிரந்தரமாக மூடும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments