கூடலூா் அருகே பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த யானை, பயிா்களை சேதப்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள வனத்தில் இருந்து உணவுத் தேடி வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய யானை, கூடலூரை அடுத்துள்ள போஸ்பாறா கிராமத்துக்குள் நுழைந்தது. சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய யானை, பின்னா் தங்கமணி என்பவரது தோட்டத்துக்குள் நுழைந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை, பாக்கு, வாழை மரங்கள், பயிா்களை சேதப்படுத்தியது.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.
குடியிருப்புப் பகுதிக்குள் விலங்குகள் நுழைவதைத் தடுக்க அகழியுடன் கூடிய மின் வேலி அமைக்க வேண்டும், சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.