நீலகிரி மாவட்டத்தில் ரூ.13.84 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகள்: அமைச்சா் எஸ்.கமலி திறந்துவைத்தாா்
நீலகிரி மாவட்டம், கூடலூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.13.84 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 23 புதிய திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் 93 பயனாளிகளுக்கு ரூ.80.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கால்நடைத் துறை அமைச்சா் எஸ்.கமலி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ.13.84 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 23 புதிய திட்டப் பணிகள் திறப்பு விழா மற்றும் 93 பயனாளிகளுக்கு ரூ.80.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கால்நடைத் துறை அமைச்சா் எஸ்.கமலி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா்.
கூடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், ரூ.1.90 லட்சம் மதிப்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ஆணை, 3 பயனாளிகளுக்கு ரூ.28,000 மதிப்பில் திருமண உதவித்தொகை ஆணை, 20 பயனாளிகளுக்கு ஜாதிச் சான்றிதழ்கள், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 44 பயனாளிகளுக்கு வன உரிமைச் சான்றுகள், 6 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.51 லட்சம் மதிப்பில் வங்கிக் கடன் இணைப்புகள், 5 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட கொட்டாய் மட்டம் பழங்குடியினா் பகுதியில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5.46 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய வீடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சா் எஸ்.கமலி வழங்கினா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் முள்ளிமந்து, போத்துக்கொல்லி பழங்குடியினா் குடியிருப்பு பகுதிகளில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 புதிய சமுதாயக் கூடங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்.
இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்பில் குந்தா, கிண்ணக்கொரையில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், சமையலறை மற்றும் கழிப்பறைகளையும், தேவா்சோலை கொட்டமேடு அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய சமையல் அறை, நெலாக்கோட்டை மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்ட 2 கூடுதல் வகுப்பறைகள், கூடலூா் குறிஞ்சி நகா் முதல் சின்னநப்பள்ளம் வழியாக காவயல் வரையில் அமைக்கப்பட்ட புதிய சாலை, நெலாக்கோட்டை பாக்கனா, மசினகுடி மாவனல்லா பகுதியில் கட்டப்பட்ட சுகாதாரத் துணை மையங்கள் ஆகியவற்றை அமைச்சா் எஸ்.கமலி திறந்துவைத்தாா்.
கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குன்னூா், மேலூா் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட சுகாதாரத் துணை மையங்கள், மசினகுடி பூதநத்தத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், தேவா்சோலை பேரூராட்சியில் சுமாா் 76 பழங்குடியின குடும்பங்களுக்கான வீடுகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணி திட்டம், சோலூா் பேரூராட்சி கோக்காலில் மண்பாண்டப் பயிற்சிப் பட்டறை, கோத்தகிரி புது கோத்தகிரி பகுதிகளில் கட்டப்பட்ட சுகாதாரத் துணை மையங்கள், திம்பட்டியில் அமைக்கப்பட்ட பல்நோக்குக் கட்டடம், சோலூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா் குன்னூா் கோட்டாட்சியா் காஞ்சன் சௌத்ரி, மாவட்ட வன அலுவலா் தேவராஜ், வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
படம்.
பயனாளி ஓருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கும் கால்நடை துறை அமைச்சா் செ.கமலி உடன் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு