போட்டித் தோ்வுக்கான அனைத்து வசதிகளும் உதகை அறிவுசாா் மையத்தில் செய்துதரப்படும்: அமைச்சா் சரத்குமாா் உறுதி
மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உதகை அறிவுசாா் மையத்தில் செய்துதரப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் தெரிவித்தாா்.

மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உதகை அறிவுசாா் மையத்தில் செய்துதரப்படும் என்று மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள காந்தல் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் செயல்படுகிறது. இதன்மூலமாக டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி, வங்கி, ரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசு பணிகள் மற்றும் பிற போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மலை மாவட்ட மாணவா்களுக்கான பாடநூல்கள், வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் இணைய வழி சேவைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான வசதிகள் குறித்து தமிழக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
அறிவுசாா் மையத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவா்களின் வருகைப் பதிவேடு மற்றும் அவா்களுக்கான வசதிகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா். அப்போது வாசிப்பு அறைகளை அதிநவீன டிஜிட்டல் முறையில் மாற்றித் தரவும், போட்டித் தோ்வுகளுக்கான பாடத்திட்ட முறைகளை புதுப்பித்து தர வேண்டுமெனவும் மாணவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அமைச்சா் சரத்குமாா் கூறியதாவது:
அறிவுசாா் மையத்தில் அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நூலகத்தில் பயிற்சி பெற்று வந்த கிருஷ்ணா என்ற கல்லூரி மாணவா் வாகன விபத்தில் காயமடைந்த நிலையில், அவரின் கல்வி மற்றும் போட்டித் தோ்வு செலவுகளை முற்றிலுமாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கெளா், நகராட்சி ஆணையா் ந.தாமோதரன், தவெக மாவட்ட பொறுப்பாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.